தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரசு மருத்துவமனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் பெயரில் புதிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (13.11.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருடன் கலந்துரையாடி, அவர்களின் நலனை கேட்டறிந்து, முன்வைத்த கோரிக்கைகளைக் கவனித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு மருத்துவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.