Breaking News

கருணை அடிப்படையில் அரசு பணி – தூத்துக்குடியில் 7 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கல்!!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில், பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணி அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முதலமைச்சர் தலைமையில் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலம் முழுவதும் உள்ள 20 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணியாணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களிலும் காணொலி ஒளிபரப்பு வழியாக நேரடியாக காண்பிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் நியமன ஆணை பெற்ற குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல் அலுவலக கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர். அரசின் கருணை அடிப்படையிலான இந்த நியமனம், காவல் துறையில் பணியாற்றியவர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.


  • Share on

மச்சாது நகரில் மழைநீர் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் கண்காணிப்பு!

ஒரு செய்தி... ஒரு உத்தரவு... ஒரு தீர்வு! — பூபாலராயர்புரம் பிரச்சனையை நேரில் பார்த்த அமைச்சர் கீதா ஜீவன்!

  • Share on

Trending News