Breaking News

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மேல மருதூரில் நீண்டநாள் கனவு நனவானது — குடிநீர் வசதி கிடைத்தது!!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் மேல மருதூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த குடிநீர் வசதி தற்போது நிறைவேறியுள்ளது.

பல ஆண்டுகளாக வல்லநாடு – சீவலப்பேரி குடிநீர் திட்டத்தில் மேல மருதூர் கிராமத்திற்கு பைப் லைன் இணைப்பு வழங்கப்படாமல் இருந்ததால், அந்தப் பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதனை தீர்க்க மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் வந்தனர்.

இதையடுத்து சமீபத்தில் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் திரு. சாமு காந்தி அவர்கள் தலைமையில், கிராம மக்களுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரடியாக சந்தித்து மனு அளித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில் தற்போது மேல மருதூர் கிராமத்தில் இரண்டு நள்ளி அமைத்து குடிநீர் வழங்கும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக அரசிற்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், மாவட்ட குடிநீர் வாட்டர் போர்டு அதிகாரி அவர்களுக்கும், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அதிகாரி அவர்களுக்கும், ஊராட்சி செயலாளர் அவர்களுக்கும் மேல மருதூர் கிராம மக்கள் சார்பிலும், தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


  • Share on

ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து ஓட்டப்பிடாரத்தில் பாஜக விளக்கப் பிரச்சார கூட்டம்!!

“பாஜகவின் கனவு தமிழகத்தில் ஒருபோதும் நனவாகாது” – தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரம்!!

  • Share on

Trending News