Breaking News

தூத்துக்குடி சண்முகபுரம் பிரதான சாலையில் மேயர் ஜெகன் ஆய்வு!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த நிலையில், அந்தப் பகுதியின் சாலை மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, பத்ரகாளியம்மன் கோயிலில் தசரா விழா கழித்து சப்பரம் சுற்றி வருவதை முன்னிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாலை சீர் அமைப்பு பணிகள் மற்றும் புதிய ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பரிசீலித்தார்.

மேயர் ஆய்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், கழக நிர்வாகி ஏசுவடியான் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி அம்மாள், கனகராஜ் ஆகியோர் கலந்து செயல்பட்டனர்.

மேயர் ஜெகன் பகுதிக் குடிமக்கள் வசதிக்கும், திருவிழா காலத்தில் போக்குவரத்து சீரமைப்புக்கும் தேவையான அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தார்.


  • Share on

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!

முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு தூத்துக்குடியில் மரியாதை அஞ்சலி!!

  • Share on

Trending News