தூத்துக்குடியில் இன்று (2 அக்டோபர் 2025) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி பழைய அலுவலக வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே நிகழ்வில், கர்ம வீரர் காமராஜ் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்களின் சிலைக்கும் தேமுதிக (DMK) சார்பில் மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழாவை M. தயாளலிங்கம், மாவட்ட கழக செயலாளர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர் மாலதி, சம்சுதீன், செயற்குழு உறுப்பினர் ராஜபொம்மு, மோகன்தாஸ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் செல்வம், சின்னத்துரை, பகுதி செயலாளர் அரசுமுத்து, நாராயணமூர்த்தி, Smart சுரேஷ், விஜய முருகன் உள்ளிட்டோர் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குலசேகரபட்டினம் பகுதியில் நடைபெறும் பெரும் திருவிழாவை முன்னிட்டு, நிர்வாகிகள் அனைவரையும் கட்டாயமாக வரச் செய்ததில்லை; விருப்பம் உள்ளோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மாவட்ட கழகத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி.