தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அன்றாடப் பயணத்திற்காக பயன்படுத்தி வரும் அரசு பேருந்துகள் அடிக்கடி சேவை நிறுத்தப்படுவதால் மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் பணிமனையில் இருந்து சிவகளை – சாயர்புரம் – கூட்டாம்புளி – புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்படும் தடம் எண் 147A பேருந்து அடிக்கடி சேவை நிறுத்தம் செய்யப்படுவது பொதுமக்கள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதுபோன்று பல்வேறு வழித்தடங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பேருந்து சேவை நிறுத்தப்படுவதால் மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் நேரத்திற்கு இடம் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தலையீடு செய்து, பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு வழக்கம்போல் பேருந்து சேவைகள் தடையின்றி நடைபெற உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.