ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பரிவல்லிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பிற்கான ரூ.36 லட்சம் மதிப்பிலான கடன் உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா 44 பயனாளிகளுக்கு கடன் உதவி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கூட்டுறவு தனி அலுவலர் லட்சுமிதேவி, கூட்டுறவு சங்க செயலாளர் அரிராம், பரிவல்லிக்கோட்டை கிளைச் செயலாளர் சௌந்தர பாண்டியன், சிவகுமார், குட்டி, இளைஞரணி சதிஷ் மற்றும் பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.