Breaking News

தேசிய பசுமைப்படை சார்பாக சர்வதேச ஓசோன் தினவிழா!!

  • Share on

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பாக சர்வதேச ஓசோன் தினவிழா நடைபெற்றது. அனைவரும் இணைந்து உயிர் பன்மய பாடல் பாடினர். பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் அனைவரையும் அன்புடன் வரவேற்புரை ஆற்றினார். துவக்கவுரை ஆற்றிய பள்ளித் தலைமை ஆசிரியர் சேசுஅந்தோனி ஓசோனின் பாதிப்பு பற்றியும், மாணவ உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பற்றியும் எடுத்து கூறினார்கள்.
     
மேலும் மாணவிகள் சொற்பொழிவு, கவிதை, பாடல் என ஓசோன் விழிப்புணர்வு செய்தியாக இருந்தது. சிறப்புரை ஆற்றிய ஆசிரியர் மிக்கேல் ஜெயலின் ஓசோனின் பாதிப்பையும், நாம் மரம் வளர்க்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்து கூறினார்கள். மாணவிகள் ஸ்ரீமதி, முத்துமாரி ஆகியோர் சொற்பொழிவு மற்றும் விழிப்புணர்வு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்பு மாணவ உறுப்பினர்கள் ஓசோன் குறித்த உறுதிமொழி எடுத்தனர். பின்பு ஆசிரியை சுகவதி ஓசோன் பாதுகாப்பு கருத்துக்கள் கூறி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமைப்படை உறுப்பினர்களும், பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல், மற்றும் ஆசிரியை சுகவதி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.



  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேயர் தகவல்!!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

  • Share on

Trending News