தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
அப்போது கூறுகையில் அதன் ஒரு பகுதியாக கதிர்வேல் நகர் முதல் நான்காம் ரயில்வே கேட் வரை உள்ள பக்கிள் ஓடை இணைப்பு தற்போது நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உட்பட மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.