Breaking News

தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் பாதுகாவலர் புனித ஆரோக்கிய நாதர் ஆலய 105 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது!!

  • Share on

ஆரோக்கியபுரம் பாதுகாவலர்  புனித ஆரோக்கிய நாதர் ஆலய 105 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது (05.09.2025)  வெள்ளிக்கிழமை மாலையில் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அருட்தந்தை அமலன் புனித தோமையார் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அவர்கள் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து திருப்பலியில் அருட்தந்தை அமலன் மறைவுரையாற்றினார் தாளமுத்து நகர் பங்குத்தந்தை பிரான்சிஸ் வசந்த் திருப்பலியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையுடன் தொடங்கி 7 மணிக்கு திருப்பலி நடைபெறும் இரவில் 8.30 மணியளவில் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான (13/9/2025) சனிக்கிழமை 9 ம் திருவிழா  மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழாவின் மாலை ஆராதனை நிகழ்விற்கு அருட்தந்தை செல்வன்  லூர்த்தம்மாள்புரம் பங்கு தந்தை அருட்தந்தை லாரன்ஸ் புதுக்கோட்டை பங்கு தந்தை தலைமை தாங்கி நடத்த இருக்கின்றார்கள்.    

தொடர்ந்து திருவிழாவில் 10 ம் திருவிழாவான ஞாயிறு காலை திருவிழா திருப்பலி அருட்தந்தை பெஞ்சமின் டி சுசா கிறிஸ்தவ வாழ்வுரிமை  இயக்கம் இயக்குனர் தலைமையில் அருட்தந்தை உபர்ட்டஸ் சிறுமலர் குறும் மடம் அதிபர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பங்குத்தந்தை பிரான்சிஸ் வசந்தன் இருதய அருட்சகோதரிகளும் அனைத்து சபையினரும்   ஆரோக்கியபுரம் இறை மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.


  • Share on

குறுக்குச்சாலையில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கிய சண்முகையா எம்எல்ஏ!!

சர்வதேச அளவிளான ஸ்குவாஷ் போட்டியில் தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவர்கள் சாதனை!!

  • Share on

Trending News