தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது மருத்துவம், இதய நல மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவங்களுக்கு ஒரே இடத்தில் பரிசோதனைகளும், மருந்துகளும் கிடைக்கும் விதமாக "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (02-08-2025) அன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்றைய தினம் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தின் மூலம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினார்.
மாவட்ட சுகாதார அலுவலர் வித்யா விஸ்வநாத் வட்டார மருத்துவ அலுவலர் கோகுல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து மற்றும் மருத்துவ அலுவலர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

