ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் இருந்து ஒசநூத்து, குலசேகரநல்லூர், ஆரைக்குளம், சங்கரராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 352 விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் வகையில் ரூ. 280 கோடி மதிப்பில் புதிய மின் வழித்தடம் அமைக்கும் பணியினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா இன்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி பொறியாளர் மணிசேகர், தலைமை பொதுக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி, தொண்டரணி கோபால், ஆவரங்காடு கிருஷ்ணசாமி, ஓசநூத்து சண்முகம், கந்தசாமிபுரம் சுரேஷ், கைலாசபுரம் முருகன், வட்ட செயலாளர் ராஜன், உலகையா, சி.பி.எம். ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழகு, ஒப்பந்தக்காரர் முருகன், மாடசாமி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
