Breaking News

ஒட்டப்பிடாரம் புதிய தாலுகா அலுவகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!

  • Share on

ஒட்டப்பிடாரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக கட்டிடத்தை, சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக இன்று திறந்து வைத்தார்.



அதைத்தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்எம்.சி. சண்முகையா பங்கேற்று குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்.

பின்னர் புதிய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை எம்.எல்.ஏ சண்முகையா நட்டி பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டாட்சியர் அறிவழகன், மற்றும் துணை வட்டாட்சியர்கள் ராதா மகேஷ்வரி டென்சிங்டாங்கே, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  • Share on

இரட்டைமலை சீனிவாசனாரின் 166 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் எம்பி, அமைச்சர், மற்றும் மேயர் மரியாதை!!

தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை!!

  • Share on

Trending News