தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் ஆணைப்படி, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, மண் மொழி மானம் காத்திட "ஓரணியில் தமிழ்நாடு" கழக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மற்றும் மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் BLA2, BDA, BLC, கூட்டமானது தெற்கு மாவட்ட திமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் தூத்துக்குடி (டூ) திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று (04.07.2025) மாலை மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் கே.கே.ஆர். ஜெயக்கொடி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர் மணி கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமார், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ், வெயில் ராஜ், ஒன்றிய அவைத் தலைவர் பால சுந்தரம், சிறுபான்மை அணி ராஜா ஸ்டாலின், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, ஒன்றிய வழக்கறிஞர் அணி மகேந்திரன், இளைஞரணி செயலாளர் சண்முக நாராயணன், மாணவரணி சற்குணம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சைமன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், உட்பட தெற்கு மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், BLA2, BDA, BLC, நிர்வாகிகள், மற்றும் கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

