ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் தொகுப்பு, பயிறு வகைகள் தொகுப்பு மற்றும் பழ செடிகள் வழங்கும் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி சண்முகையா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு காய்கறி விதைகள் தொகுப்பு, பயிறு வகைகள் தொகுப்பு, பழ செடிகள் வழங்கினார். முன்னதாக இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய எம்.எல்.ஏ சண்முகையா விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், அவருடைய வழியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிமுகப்படுத்தினார் .
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 2500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், ஊட்டச் சத்தினை உறுதி செய்யும் வகையிலும் வேளாண் இடுபொருள்கள் வழங்கி வருகிறது.
விவசாய நிலங்களை அதிகப்படுத்தும் வகையில் தரிசு நிலங்களை சீர்படுத்தி விவசாய நிலங்களாக மாற்ற வேளாண்மை பொறியியல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எப்போதும் திராவிட முன்னேற்ற கழக அரசு தான் விவசாயிகள் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தி.மு.க அரசிற்கு மக்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் லட்சுமி நாராயணபிரியா, வேளாண்மை உதவி இயக்குனர் பயிர்காப்பீடு அனி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், தோட்டக்கலை அலுவலர் சித்தார்த்தன், தோட்டக்கலை உதவி அலுவலர் சசிகலா, வேளாண் வணிகத்துறை சிவா, உதவி வேளாண்மை அலுவலர்கள் மாயாண்டி, சிவா, சரவணன் கிராம நிர்வாக அலுவலர் நெல்லையப்பன், ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், இளைஞரணி ராகுல், சுரேந்தர், அவை தலைவர் முருகன் உள்ளிட்ட விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.