Breaking News

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34 வது நினைவு தினம் - காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி ஏற்பாட்டில் காங்கிரஸ் கமிட்டி ஒர்க்கர்ஸ் மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமையில் மரியாதை!!

  • Share on

கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21 தேதி சென்னைக்கு அருகில் ஸ்ரீ பெரும் புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். இந்த நிலையில் ராஜீவ் காந்தி 32 வது நினைவு தினம் இன்று (21.05.2025) நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 34 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தனசேகர் நகரில் அமர்ந்துள்ள ஐஎன்டியுசி அலுவலகம் முன்பு  அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், தமிழ்நாடு மாநில ஐஎன்டியுசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாநகர பொது செயலாளர் இக்னேசியஸ்,
மீனவர் அணி மிக்கேல் குரூஸ், காங்கிரஸ் ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவ்ராஜ் மோகன், மாநில பேச்சாளர் பார்த்திபன், மாப்பிள்ளையூரனி எட்வர்ட், ரூஸ் வெல்ட், அசனார், காமராஜ், AICWC மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜெயஜோதி, AICWC மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, AICWC மாவட்ட செயலாளர் வசந்த்தி, AICWC மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மைதீன், AICWC மீனவர் அணி கிளாடிஸ், சேகர், முருகசேன், சாந்த குமார், பாலகிருஷ்ணன், காங்கிரஸ் SC/ST முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், சுரேஷ்குமார், வழக்கறிஞர் பிரதீப் தினகரன், வழக்கறிஞர் செல்வம், அய்யாதுரை, ஏசுதாசன், சிவலிங்கம், தாமஸ், INTUC சார்ந்த முத்து, ரமேஷ், சாரதி, கிரிதர் பாலன் மற்றும் ஏராளமான தேசிய நெஞ்சங்கள் கலந்து கொண்டார்கள்.


  • Share on

ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. குறித்து தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் அக்கிரி பரமசிவத்தை கைது செய்ய கோரி தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு!!

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய விளையாட்டு மைதானத்தை இன்னும் 10 நாட்களில் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!

  • Share on

Trending News