எம்.எல்.ஏ. சண்முகையா குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய வரும் அக்கிரி பரமசிவம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று தமிழர் விடுதலைக் களம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
தமிழர் விடுதலைக் களம் தலைவர் ராஜ்குமார் அளித்த மனுவில் தெரிவித்ததாவது :-
நான் மேற்கண்ட தமிழர் விடுதலைக்களம் அமைப்பின் தலைவராகவும், மாண்பமை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் உள்ளேன்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் அவரது அண்ணன் தொழிலதிபர் முருகேசன் ஆகியோரை, சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களோடு தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று மக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காக சட்டமன்றத்தில் பதிவு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றியும், தொகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களையும் நேரடியாக சந்தித்தும் சிறப்பாக மக்கள் பணி செய்துவருகிறார்.

அவரது அரசியல் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலைகடத்தலில் எம்.எல்.ஏ. சண்முகையா என்பவருக்கும், அவரது உடன்பிறந்த சகோதரர் முருகேசன் என்பவருக்கும் தொடர்பு என ஆதாரமில்லாத உண்மைக்கு புறம்பாக அவதூறு பரப்பும் வகையில் FACE BOOK-ல் அக்ரி -பரமசிவன் என்பவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு 9843739305, 8015176060 ஆகிய எண்களில் இருந்தும் வாட்ஸ் -அப் - தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, அவரது சகோதரர் முருகேசன் அவர்களது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்பி வரும் அக்ரி பரமசிவன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்று எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
