தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து விளையாட்டு கழகம் சார்பில் ஜூன் 9 முதல் 14 ஆம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான கைப்பந்து போட்டிக்கு சத்யா ஏஜென்சி லிமிடெட் டைட்டில் ஸ்பான்சராக செயல்படுகிறது. இதையொட்டி சத்யா நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடி சத்யா ரிசார்ட்டில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சத்யா ஏஜென்சி உரிமையாளர் ஜாக்சன் செய்தியாளர்களை சந்தித்து, சத்யா கோப்பைக்காக நடத்தப்படும் இந்த அகில இந்திய கைப்பந்து போட்டியில் இந்திய அளவில் புகழ்பெற்ற அணிகள் மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளதாக தெரிவித்தார். மேலும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் சத்யா நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், அதனொரு பகுதியாக இந்தப் போட்டிக்கு டைட்டில் ஸ்பான்சராக இணைந்திருப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து விளையாட்டு கழக தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் செயிண்ட் ரவிராஜன் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த அகில இந்திய கைப்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.