Breaking News

“புதிய மாற்றத்திற்கான புதிய தொடக்கம்” தூத்துக்குடி மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன் – எம்.எல்.ஏ. ஸ்ரீநாத் உறுதி!!

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள A.ஸ்ரீநாத், தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்து செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியதாவது:-


“தூத்துக்குடியில் வாழும் அனைத்து சொந்தங்களுக்கும் முதற்கண் என் பாதம் தொட்ட வணக்கங்கள். நேற்று தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும் இன்று நான் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளேன். இதற்காக தூத்துக்குடி மக்களுக்கும், என்னை நம்பி ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


என் வாழ்நாளில் கிடைத்த மிக அரிய வாய்ப்பாக இந்த பொறுப்பை கருதுகிறேன். தூத்துக்குடி மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும், தொகுதியின் முழுமையான மேம்பாட்டிற்கும் முழு அர்ப்பணிப்புடன் பாடுபடுவேன்.


சட்டமன்ற பணிகள் மற்றும் பெரும்பான்மை நிரூபித்தல் உள்ளிட்ட அரசுப் பணிகள் காரணமாக இன்னும் சில நாட்களில் தூத்துக்குடிக்கு வந்து நிரந்தரமாக தங்கி மக்கள் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளேன். முதற்கட்டமாக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்பட்ட பின், மக்கள் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக நேரடியாக கையில் எடுத்து சட்டப்படி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


தூத்துக்குடி மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கக்கூடிய வகையில் தனிப்பட்ட தொடர்பு மையம் உருவாக்கப்படும். அதற்காக சிறப்பு கைபேசி எண்கள், தொடர்பு கொள்ளும் வசதிகள் மற்றும் நேரடி கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து வார்டுகளிலும் மக்களின் தேவைகள் விரைவாக நிறைவேற்றப்படும்.


கூடிய விரைவில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள தனி கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படும். இனி தூத்துக்குடியில் ஒரு புதிய மாற்றம் உருவாகும் என்ற முழு நம்பிக்கையுடன் மக்கள் அனைவருடனும் இணைந்து செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.


  • Share on

கோடை விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு விழா: குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின!!

“பேனரால் பேராபத்து?” — தூத்துக்குடியில் தவெக டிஜிட்டல் போர்டுகள் மீது போலீசில் திமுக மாணவர் அணி புகார்!!!

  • Share on

Trending News