தூத்துக்குடியில் எஸ்பி எடிசன் ராஜா அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு கோப்பை மற்றும் மாற்றும் பரிசுகளுக்கான மாநில அளவிலான மாபெரும் பெண்கள் கபடி போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 26 பெண்கள் அணிகள் கலந்து கொண்டு உற்சாகமாக போட்டியிட்டன. போட்டியின் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.20,000, மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகளாக தலா ரூ.10,000, ஐந்தாம் முதல் எட்டாம் பரிசுகள் வரை தலா ரூ.5,000 மற்றும் நினைவு கோப்பைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை நேச கரங்கள் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிறுவனர் பவுல்ராஜ் தொடங்கி வைத்து வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பெண்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய போட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாபெரும் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு சான்றோர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் நிறுவனரும் தலைவருமான எஸ்பி சிலுவை சிறப்பாக செய்திருந்தார். போட்டியை காண ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள் திரண்டதால் மாவட்ட விளையாட்டு அரங்கம் உற்சாகத்தால் குலுங்கியது.