Breaking News

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 70-வது ஆண்டு சித்திரை திருவிழா: கால்நட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!

  • Share on

பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 70-வது ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கால்நட்டு விழா இன்று (01-05-2026) காலை ஆலய வளாகத்தில் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.


காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்ற இந்த மங்களகரமான நிகழ்வில், ஆலய பூஜைகள், வழிபாடுகள் மற்றும் சிறப்பு சடங்குகள் நடைபெற்றன. அன்னை வீரசக்கதேவியின் அருளைப் பெற திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


இந்நிகழ்ச்சியை விழாக்குழு தலைவர் வலசை V. கண்ணன் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தலைவர் R. கண்ணன் (குளத்தூர் மாஜி ஜமின்தாரர்) மற்றும் செயலாளர் M. ஆதிசங்கர் M.A., பொருளாளர் P. வரதராஜப்பெருமாள் B.Com. ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.


சமுதாய மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பக்தர்களுக்காக அன்னதானமும் நடைபெற்றது. மேலும், வழக்கம்போல் இன்று இரவு பௌர்ணமி பூஜையும் நடைபெறுகிறது. தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விழாக்குழு தெரிவித்துள்ளது.


  • Share on

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு விழா அழைப்பிதழ் வழங்கல்: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய 70வது ஆண்டு விழா உற்சாகம்!!

சித்ரா பவுர்ணமி விழாவில் உலக நலன் வேண்டி மஹா யாகம்: பசுமை வளம் பெருக பிரார்த்தனை!!

  • Share on

Trending News