தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி பி. கீதாஜீவன் அவர்கள் பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்து வாக்காளர்களிடம் ஆதரவை கோரியுள்ளார்.
மகளிரின் பொருளாதார சுயநிலையை உயர்த்தும் வகையில், தற்போது வழங்கப்படும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்பங்களின் தினசரி செலவுகளை சமாளிக்க பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.5 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு தொழில்கள் அதிகரித்து, வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஆதரிக்கும் “புதுமை பெண்” மற்றும் “தமிழ்ப்புதல்வன்” திட்டங்களின் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.8,000 மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங் மெஷின், டிவி, ஃபிரிட்ஜ், மிக்சி, மின்சாதனங்கள் போன்ற தேவையான பொருட்களில் எதையும் தேர்வு செய்து பெறும் வசதி ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டவை எனக் கூறிய கீதாஜீவன் அவர்கள், “வளர்ச்சியும் நலனும் சேரும் பாதையில் தூத்துக்குடியை முன்னேற்றுவோம்” என உறுதியளித்தார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.