அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடியார் அவர்களின் ஆலோசனைப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சி சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டம் கழக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உயர்திரு சி.த. செல்லப்பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் உற்சாகமான அரசியல் சூழலில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி. கருணாநிதி, வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பாஜக சசிகலா புஷ்பா, விவேகம் ரமேஷ், A.M. ராஜேஷ், அமமுக ஜானியல், நவஜீவன் பெரியசாமி, தமகா SDR விஜய் சீலன், பாமக லட்சுமணன், தமமுக லாரன்ஸ், புரட்சி பாரதம் மாரி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக சார்பு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் டாக் ராஜா, பெருமாள், வீரபாகு, நடராஜன், பில்லா விக்னேஷ், துரை சிங், விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் இணை செயலாளர் ஷெரினா பாக்யராஜ், துணை செயலாளர் சந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்களாக சேவியர், முருகன், சுடலை மணி, ஜெய்கணேஷ், நட்டார் முத்து, தனராஜ், சந்தனபட்டு ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் மந்திர மூர்த்தி M.C., ஜீவா பாண்டியன், பொன்ராஜ், ஜோதி மணி, PTR ராஜகோபால், மனோஜ், அகஸ்டின், சகாயராஜ், ராஜா ராம், அன்ட்ரூ மணி, முனியசாமி, ஜெயம் பெருமாள், சிவசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். மகளிர் மாவட்ட அணி இணை மற்றும் துணை நிர்வாகிகளாக அந்தோனி கிரேஸி, சண்முகத்தாய், மெஜிலா, சாந்தி (முன்னாள் MC), ஞானபுஷ்பம், ராதா ஆனந்த், ஆறுமுகநேரி சாந்தி, முத்து லெட்சுமி, அன்னபாக்யம், தமிழரசி, ராஜேஸ்வரி, இந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நகர, பகுதி, வார்டு, வட்ட, தொழிற்சங்கம், முன்னாள் மற்றும் இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள், கூட்டணியின் வலிமையை அதிகரிக்கும் முயற்சிகள் மற்றும் செயல்வீரர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.