Breaking News

பங்குனி பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மஹா யாகம் – பக்தர்கள் திரளான பங்கேற்பு!!

  • Share on

ஸ்ரீசித்தர் பீடத்தில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் பங்குனி மாதம் 9-ஆம் தேதி (23-03-2026, திங்கள்) வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு மஹா யாக வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.


இந்த மஹா யாக விழா "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. உலகில் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்து வளர வேண்டும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன.


இதன் ஒரு பகுதியாக ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.


மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டு குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


  • Share on

தூத்துக்குடியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆலோசனை கூட்டம்: 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிர கருத்து கேட்பு!!

கட்டபொம்மன் நகரில் ஸ்ரீ வீரசந்தண மாரியம்மன் கோயில் கால் நாட்டு விழா கோலாகலம் – திருவிழா மார்ச் 29ல் தொடக்கம்!!

  • Share on

Trending News