Breaking News

சுகாதாரம் – மனநலம் குறித்து விழிப்புணர்வு: வ.உ.சி. கல்லூரி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் சிறப்பாக நடந்தது!!

  • Share on

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் என்.எஸ்.எஸ். அணி – 68 (பெண்கள்) சார்பில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (10.03.2026) சூசைப்பாண்டியாபுரம் ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.


காலை அமர்வில் சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அரசு ஆயுஷ் மருத்துவ அதிகாரி டாக்டர் டி.எல்.எஸ். ஜான் மோசஸ் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி கதிரியக்கவியல் பேராசிரியர் டாக்டர் ஈ. ஃப்ளோரா ஜுவானிட்டா கலந்து கொண்டு உடல்நலம், சுகாதாரம் மற்றும் தனிநபர் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.


தொடர்ந்து நடைபெற்ற பிற்பகல் அமர்வில் மனநலம் மற்றும் உளவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பி. ராஜராஜேஸ்வரி, இ. ரம்யா, யு. ராஜேஸ்வரி, எஸ்.டி. சாம் மற்றும் ஏ. மரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் நலனின் அவசியம் குறித்து பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சிகளில் என்.எஸ்.எஸ். மாணவிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமின் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.


  • Share on

புதுக்கோட்டையில் வ.உ.சிதம்பரம் கல்லூரி NSS மாணவிகள் விழிப்புணர்வு முகாம் – EVM மற்றும் சட்ட உரிமைகள் குறித்து மக்களுக்கு விளக்கம்!!

“நல்லாட்சி தொடர மக்களின் ஆதரவு தேவை” – பிரையன்ட் நகரில் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தல்!!

  • Share on

Trending News