உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் அணி மாநில தலைவர் மற்றும் தொழிற்சங்க பேரவை தலைவருமான ஏ.பி. தாமரை வெங்கடேசன் தலைமையேற்று ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் இனிப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண்களின் சமூக முன்னேற்றம் மற்றும் நலனுக்கான கருத்துகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சீதாலட்சுமி சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முருகேசன் பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர்கள் பாலமுருகன், ஜெயலட்சுமி, தென்காசி மாவட்ட தலைவர் செந்தில்குமார், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் எம். சுப்புராஜ், மாவட்ட துணை தலைவர் ஏ.எம். பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.