பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் நாளை (23.02.2026) திங்கட்கிழமை காலை தூத்துக்குடி வருகிறார். அவர், சர்வானந்த சோன்வல் அவர்களுடன் இணைந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இதையொட்டி, நாளை காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள ரவுண்டானா சாலையில் தூத்துக்குடி பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, துறைமுகத்தில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.