ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சமூக நலப் பணிகள் நடைபெற்றன.
காலையில் மையவாடி பின்புறம் உள்ள டிஎம்பி காலனியில் செயல்படும் “நேசகரங்கள்” முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம், தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளம் அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் சிறப்பு மதிய உணவு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஜெபா, மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட ஒன்றிய தலைவர் செண்பகராஜ், மாவட்ட மன்ற ஆலோசகர் சுயம்பு ராஜ், மாவட்ட அமைப்பாளர் விக்னேஷ், ரசிகர் டேவிட் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர். பிறந்தநாளை சமூகப் பொறுப்புடன் கொண்டாடிய ரசிகர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.