அருள்மிகு தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தாபன நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு 19ஆம் தேதி மாலை கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார விமான கோபுரங்களுக்கு பாலாலய கும்ப ஸ்தாபனம் நடைபெற்றது. பின்னர் முதல் கால யாகசாலை பூஜை மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
இன்று (20ஆம் தேதி) காலை 8 மணிக்கு விநாயகர் பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான கோபுரங்களுக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
யாகசாலை மற்றும் பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சிவா, குரு ஆகியோர் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் ருக்மணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செல்வசித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலகுருசாமி, சிவன் கோவில் அறங்காவலர் ஜெயலட்சுமி, முன்னாள் அறங்காவலர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆன்மீக பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் உஷாதேவி, மாவட்ட மருத்துவப் பணி தலைவர் பாலாஜி, கிழக்கு மண்டல தலைவர் ராமசுப்பு மற்றும் முருகேசன், அமிர்தராஜ், ஆனந்தராஜ், சங்கரி, மணிகண்டன், வேலாயுதம், பாலசுப்பிரமணியன், மீனாட்சிநாதன், கோபால், எல்.ஐ.சி. கிருஷ்ணன் (கிட்டு) உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.