தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சியில் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் 180 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி கூட்டுடன்காடு சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. அய்யனார் நகர், ராஜிவ் நகர், இந்திரா நகர், நடு கூட்டுடன்காடு மற்றும் ஆறுமுகம் நகர் பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் ராஜா, சின்னதுரை, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்கொடி, ஒன்றிய துணைச் செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முக நாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் மணிகண்டன், வசந்த், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, கிளைச் செயலாளர்கள் கல்லத்தியான், சேரந்தையன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.