Breaking News

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா: ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ எம்.சி.சண்முகையா பங்கேற்பு!!

  • Share on

தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கருங்குளம் மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.


கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் குரு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சி ராணி, ஆறுமுகராஜா நயினார், வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா, மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா, கருங்குளம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுரேஷ்காந்தி, ராமசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சஞ்சய், கிளை செயலாளர் குண்டுமணி மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அதேபோல், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழாவிலும் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் அய்யனார், துணை வட்டாச்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாச்சலம், ஜவஹர், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  • Share on

சிலுவைப்பட்டி பள்ளியில் ‘கதை சொல்லும் விழா’ – மாணவர்களுக்கு நற்பண்பும் தன்னம்பிக்கையும் விதைத்த நிகழ்வு!!

விளாத்திகுளத்தில் நலத்திட்டங்கள் வேகத்தில்: G.V.மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் வளைகாப்பு விழா – மருத்துவ முகாம்!!

  • Share on

Trending News