Breaking News

“தூத்துக்குடி யாருக்கு? — தொகுதி ஒதுக்கீட்டை நோக்கி கட்சிகளில் சீட் கணக்கு!”

  • Share on

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அடுத்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் செய்தி தொலைக்காட்சி இன்ஸ்டாகிராம் பதிவைத் தொடர்ந்து, “இந்த முறை யாருக்கு டிக்கெட்?” என்ற கேள்வி தொகுதி மக்களிடையே தீவிரமாக பேசப்படுகிறது.


திமுகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்றும், மாற்றாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கும் சீட் வழங்கப்படலாம் என்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், ஆர். சுதாகர், ஆண்ட்ரூ மணி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


பாஜக சார்பில் சசிகலா புஷ்பா அல்லது சண்முக சுந்தரம் பெயர்கள் முன்வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் சகாயராஜ், முரளிதரன், ஐய்சன் சில்வா ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டால் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ், ஜே.கே.ஆர். முருகன் அல்லது அஜிதா ஆக்னல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜேக்கப் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


தொகுதி எந்தக் கட்சிக்கு ஒதுக்கப்படும்? யாருக்கு சீட் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பில் தூத்துக்குடி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


  • Share on

ஒரே வாசல் 24 மணி நேரம் திறப்பு – தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மக்கள் அவதி; அனைத்து நுழைவாயில்களையும் திறக்க பாஜக கோரிக்கை!!

எம்.சி. சண்முகையா எம்எல்ஏ தலைமையில் புதியம்புத்தூரில் நாளை ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!!

  • Share on

Trending News