Breaking News

பாஞ்சாலங்குறிச்சியில் குலதெய்வ திருவிழா கோலாகலம் – வீரசக்கதேவி வருஷாபிஷேக விழாவுக்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவுக்கு நேரில் அழைப்பு!!

  • Share on

இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 15-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை மறுநாள் (பிப். 7 – சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.


இதனை முன்னிட்டு, விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்களை, பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள இவ்வாலயம், வரலாற்று சிறப்பும் ஆன்மீக பெருமையும் கொண்டதாக விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் வருஷாபிஷேக விழா, பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


  • Share on

9-வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா – 2026 புத்தகக் கண்காட்சி சின்னம் அறிமுக விழா கோலாகலம்!!

போக்குவரத்து விழிப்புணர்வு பதாகை: எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டார்!!!

  • Share on

Trending News