தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ள நிலையில், “மீண்டும் அக்கா கீதா ஜீவன் தான்” என்ற மக்கள் குரல் தற்போது சமூக வலைதளங்களில் வெளிப்படையாக ஒலித்து வருகிறது.
மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் மீது வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு முழுமையாக கிடைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருபவர் அமைச்சர் கீதா ஜீவன் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பெண்களின் பொருளாதார மேம்பாடு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
“எப்போதும் எளிமையாக மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பவர்” என வாக்காளர்கள் அந்த வீடியோக்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் மீண்டும் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் கருத்துகளை கவனித்தால், தூத்துக்குடி தொகுதியில் அமைச்சரின் மக்கள் ஆதரவு உறுதியானதாக இருப்பதும், அவரது சேவைகள் மீதான நம்பிக்கை தொடர்ந்து வலுப்பெற்று வருவதும் தெளிவாகிறது.
இதனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோக்கள், தூத்துக்குடி அரசியல் சூழலில் மீண்டும் ஒருமுறை கீதா ஜீவன் பெயரை முன்னணியில் கொண்டு வந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.