திமுக இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் தொடர்பாக, தூத்துக்குடி மத்திய ஒன்றிய கிளை இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் KKR ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், இளைஞர் அணி பார்வையாளர் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் சதாம் உசைன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பால்துரை ஆகியோர் கலந்து கொண்டு, இளைஞர் அணியின் செயல்பாடுகள், கட்சி கட்டமைப்பு வலுப்படுத்தல், வருங்கால அரசியல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டு, கூட்டத்தை சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடத்தினர்.