தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் இன்று (31.01.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்த பி.டி.செல்வகுமார், செய்தியாளர் எழுப்பிய ஒரு நேரடி கேள்விக்கு பதிலளிக்காமல் தவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
“இளைஞர்கள் நடிகர்களின் பின்னால் செல்லக் கூடாது” என அறிவுரை வழங்கிய செல்வகுமார், தாங்களே பல ஆண்டுகள் நடிகர் விஜயுடன் மேலாளராக இருந்ததை நினைவூட்டிய செய்தியாளர், “அப்படியென்றால் நீங்க கெட்டுப் போகவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு நேரடி பதில் கூறாமல் மவுனம் காத்த செல்வகுமார், தன் கருத்துகளிலேயே முரண்பாடு இருப்பதை வெளிப்படுத்தியதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் விமர்சித்தனர்.
செல்வகுமாரின் இந்த மவுனம், நடிகர் விஜய் குறித்த அவரது கடுமையான விமர்சனங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதாகவும், செய்தியாளர் சந்திப்பில் இது முக்கிய பேசுபொருளாக மாறியதாகவும் குறிப்பிடத்தக்கது.