Breaking News

ஆதிதிராவிடர் கடைகள் கட்ட தடை – பேரூராட்சி தலைவர்மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை!!!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கட்டப்பட இருந்த கடை வளாகத்தை திட்டமிட்டு தடுத்து நிறுத்தியதாக கூறி, பேரூராட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் தலைவர் சாமு காந்தி மள்ளர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :


ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்கா பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், தமிழக அரசின் தாட்கோ திட்டத்தின் கீழ் சுமார் 10 கடைகள் கட்டப்பட்டு, அந்தப் பகுதியை சேர்ந்த ஆதிதிராவிட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொழில் நடத்த வாடகைக்கு வழங்கப்பட்டு வந்தது.


காலப்போக்கில் கடைகள் பழுதடைந்த நிலையில், தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் புதிய கடைகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு, இதற்காக 24.07.2025 அன்று டெண்டர் விடப்பட்டதாகவும், இதன் மதிப்பீட்டுத் தொகை சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் கட்டுமானப் பணியை தொடங்க முயன்ற போது, பேரூராட்சி தலைவராக செயல்படும் கல்யாணசுந்தரம், இங்கு மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடைகள் கட்டக் கூடாது என கூறி, தீண்டாமை உணர்வுடன் செயல்பட்டு பணிகளை தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் இருந்த இடத்தை முள்வேலி போட்டு அபகரித்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து மாதங்களாக கட்டுமானப் பணிகள் தொடங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றும் அதிகாரியும் தலைவர் கூறியதை ஏற்று கடைகள் கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு விரோதமாக, மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் தீண்டாமை உணர்வுடன் செயல்படக் கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


எனவே, ஆறுமுகநேரி பேரூராட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு கடைகள் கட்டுவதை தடுத்து நிறுத்திய பேரூராட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள் மீது தீண்டாமை வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக கடைகள் கட்டும் பணியை தொடங்க உத்தரவிட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  • Share on

போதைப்பொருளுக்கு இடமளிக்காதீர்கள் – பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வீடியோ மூலம் அறிவுரை வழங்கிய சகா.மா. சங்கர்!!

ஒட்டப்பிடாரம் தொகுதியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் – பள்ளி மாணவிகளுக்கு பேருந்து வசதி உறுதி – கடலில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்!!

  • Share on

Trending News