Breaking News

அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் தினம் – தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க வீர வணக்கம்!!

  • Share on

தமிழ் மொழிக்காக தன்னுயிர் தந்த மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் மொழிப்போர் தியாகிகள் தினம் நிகழ்ச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் இன்று (25.01.2026 ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் உள்ள வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சி அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ் மொழி காக்க உயிர் தியாகம் செய்த தியாகிகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.


  • Share on

தூத்துக்குடி – திருச்செந்தூருக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை: மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை!!

தூத்துக்குடி மாநகராட்சி 20-வது வார்டு பகுதி சபா கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!

  • Share on

Trending News