அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணையின் பேரில், கழக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மானூர் மேற்கு ஒன்றியம் சுத்தமல்லி விலக்கில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை N. கணேசராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கழக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் சிறப்பு உரையாற்றினார். உரையில் எம்.ஜி.ஆரின் மக்கள் நல திட்டங்கள், சமூக நீதிக்கான அவரது பங்களிப்புகள் மற்றும் அதிமுகவின் கொள்கை பயணம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட முன்னணி நிர்வாகிகளுடன், தூத்துக்குடியில் இருந்து மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் R.L. ராஜா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் Ex.MC, முன்னாள் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி.த.செ.ஜெபசிங், வட்ட செயலாளர் அந்தோனி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், மண்டல தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வட்ட பிரதிநிதிகள் அய்யப்பன், ராஜசேகர், வல்லநாடு மகாராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.