தூத்துக்குடி மாநகரம், திரேஸ்புரம் பகுதி 8வது வார்டுக்கு உட்பட்ட சிலுவையார் கோவில் தெருவில் சிலுவையார் நற்பணி மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், அந்தத் திட்டங்கள் உரிய பயனாளிகளிடம் சென்று சேர்வதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் பவானி, வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட பிரதிநிதி மார்ஷல், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ராபர்ட், எட்டாவது வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரெடிஸ்டன், விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி ரக்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி சாலமன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி நிக்கோலஸ், அண்ணா சங்குளி சங்க தலைவர் இசக்கிமுத்து, சிந்தாதுரை மாதா மீனவர் சங்க ஆல்ட்ரின், மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ராஜா போஸ் ரீகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சிலுவையார் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் இளையான்ஸ், சாம்சன், ராஜன், சுதர்சன், அபிசன், மெல்பர், பிதலீஸ், சேவியர், சஞ்சய், ரெனால்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.