Breaking News

ஒட்டப்பிடாரம் தொகுதி – தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கேடிசி நகரில் ரூ.16 லட்சம் நியாய விலைக்கடை எம்.சி. சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்!!

  • Share on

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு, கேடிசி நகரில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.


இந்த விழாவிற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி.சண்முகையா தலைமை தாங்கி, புதிய நியாய விலை கடை கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டினார்.


3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆதிதிராவிட நலக்குழு செயலாளர் TTC இராஜேந்திரன், ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சேவியர், கேடிசி செல்வராஜ், EB செல்வராஜ், பாலு, வீரப்பன், ராஜாமணி, மகளிர் அணி அமுதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கப்படுவதன் மூலம், கேடிசி நகரைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எளிதாகவும், வசதியாகவும் கிடைக்கும் என தெரிவித்த அவர்கள், இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.


இவ்விழா, பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு நிறைவேற்றமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


  • Share on

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் – தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊரக–நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!

“இரண்டு ஆண்டுச் சாலை அவலம்: ‘பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகே ஆய்வா?’ – பிஜேபி முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம் கேள்வி”

  • Share on

Trending News