Breaking News

பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3,000 – தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டில் டோக்கன் வழங்கல்!!

  • Share on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியில் அதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று நடைபெற்றது.


தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கி, திட்டத்தின் நடைமுறைகள் குறித்து விளக்கினார். இந்த ரொக்கப் பரிசுத் திட்டம் பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.


டோக்கன் பெற்ற பொதுமக்கள், அரசின் இந்த ஏற்பாட்டுக்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினர்.


  • Share on

“களத்தில் அமைச்சர் கீதா ஜீவன்… மக்கள் மனதில் திராவிட மாடல் ஆட்சி”

“ஜன நாயகன்” வெற்றிக்காக இறை வழிபாடு – தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை!!

  • Share on

Trending News