திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோவை, பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
வீரசக்கதேவி ஆலயக் குழு செயலாளர் ஆதிசங்கர், பொருளாளர் வரதராஜ பெருமாள் தலைமையில், ஆலயக் குழு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், சமுதாயப் பெரியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர், தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து துரை வைகோவை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு நட்புறவுடனும் மரியாதை நிமித்த சூழலிலும் நடைபெற்றது.