Breaking News

“பெரியார் 52-வது நினைவு நாள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை”

  • Share on

சமூகநீதித் தத்துவஞானியும் திராவிட இயக்கத்தின் தந்தையுமான தந்தை பெரியாரின் 52-வது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, சிறுபாண்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி, மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சாரதி, துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்சிங், நைஸ்பரமசிவம், மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, தொழிலாளரணி துணைத்தலைவர் செந்தில்குமார், சிறுபாண்மை அணி தலைவர் செய்யதுகாசிம், துணை அமைப்பாளர் சாகுல்ஹமீது, மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் பெல்லா ஆகியோர் பங்கேற்றனர்.


அதேபோல் மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், பாலன், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், பாலகுருசாமி, கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பொன்ராஜ், சதீஷ்குமார், கங்காராஜேஷ், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், நாகேஸ்வரி, சரவணக்குமார், பொன்னப்பன், கண்ணன், ஆறுமுகம், ரெக்ஸ்லின், ராஜதுரை, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், கந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.


மேலும் தொமுச நிர்வாகிகள் முருகன், கருப்பசாமி, வேல்முருகன், வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மணி அல்பட் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் முனியசாமி, மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் சக்திவேல், பொன்ராஜ், பால்ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க தந்தை பெரியார் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை என்றும், அவரது கொள்கைகள் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன என்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர்கள் தெரிவித்தனர்.


  • Share on

“தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நியமனம் – புதுக்கோட்டையில் பட்டாசு, இனிப்புகளுடன் உற்சாக வரவேற்பு”

“குறைதீர்க்கும் முகாமில் மக்களுடன் இணைந்து நகர வளர்ச்சி – அரசு துறை, பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி”

  • Share on

Trending News