Breaking News

அக்காநாயக்கன்பட்டியில் ரூ.29.5 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடக்கம் – வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டத்தில் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!

  • Share on

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், அக்காநாயக்கன்பட்டி ஊராட்சியில் மொத்தம் ரூ.29.5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக,

1. புளியம்பட்டி வடக்கு தெருவில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி,

2. ஒட்டுடன்பட்டி தெற்கு தெருவில் ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி,

3. அக்காநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் பணி,

4. அக்காநாயக்கன்பட்டி கிராமம் கிழக்குத் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
ஆகிய பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, கிராம நிர்வாக அலுவலர் ஜவஹர், ஒன்றிய சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் ஆரோக்கியராஜ், மகளிரணி காளியம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை, இளைஞரணி மகேஷ், ஆகாஷ், கிளை செயலாளர்கள் இளங்கோ, ராமநாதன், அரசு ஒப்பந்ததாரர்கள் முஹம்மது, ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து “என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி…” என்ற முழக்கத்துடன் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பன்குளம் (பாகம் எண் 8), கலப்பைபட்டி (பாகம் எண் 9), கீழக்கோட்டை (பாகம் எண் 10), கே.கைலாசபுரம் (பாகம் எண் 11) ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எம்.சி.சண்முகையா கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில், திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டிய ஆலோசனைகளை கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார். மேலும் அரசின் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கவும் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் பண்டாரம், இளைஞரணி மகேஷ், ஆகாஷ், கிளை செயலாளர்கள் வில்லியம் பாஸ்கர், கோமதி, ஜோசப், முருகன், பழனி உள்ளிட்டோர், பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாயுமானவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் – அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!

தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கம் சார்பில் 2026 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீடு!!

  • Share on

Trending News