விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக மேற்கொண்ட நிகழ்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பட்டினமருதூர் – புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பட்டினமருதூர் – பாலர்பட்டி கிராமத்தில் ரூ.17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணியை ஜி.வி. மார்கண்டேயன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி சத்யராஜன், சோலைசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் முத்துக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கே.சண்முகப்புரம் – வேடநத்தம் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணி
மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் கே.சண்முகப்புரம் வேடநத்தம் இடையே மரக்கன்றுகள் நடும் பணியை ஜி.வி. மார்கண்டேயன் துவக்கினார்.
நிர்வாக இயக்குனர் ராகவன், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், இம்மானுவேல், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். சாலை ஓரங்களை பசுமையாக்கும் இந்த முயற்சி உள்ளூர் மக்களிடம் பாராட்டைப் பெற்றது.
கொல்லம்பரம்பு – ரூ.4.40 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கொல்லம்பரம்பு பகுதியில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கௌரிகருணாகரன், ஒன்றிய நிர்வாகிகள் கருணாகரன், கணேசன், பெருமாள்சாமி, லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
விளாத்திகுளம் – ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ மக்கள் சந்திப்பு
விளாத்திகுளம் பேரூர் கழகம் பாகம் எண் 198 – ராஜீவ் நகரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு நிகழ்வில் ஜி.வி. மார்கண்டேயன் கலந்து கொண்டு மக்களுடன் நேரடியாக உரையாடினார்.
நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பாக முகவர் வேலுச்சாமி, கழகப் பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மீனாட்சிபுரம் – மாநில அளவில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
கரூரில் நடைபெற்ற பசுமையும் பாரம்பரியமும் கலைத் திருவிழாவில் நாட்டுப்புற நடனத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பாராட்டும் விழாவில் ஜி.வி. மார்கண்டேயன் கலந்து கொண்டார். மாணவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்வில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி, ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, நெசவாளர் அணி நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மந்திக்குளம் – வெற்றி வாக்குச்சாவடி மற்றும் பள்ளி கலை நிகழ்ச்சி
மந்திக்குளம் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் ஜி.வி. மார்கண்டேயன் கலந்து கொண்டு, கிராம மக்களுடன் உரையாடினார். கழக செயலாளர் சின்னமாரிமுத்து மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கத்தாளம்பட்டி – விபத்தில் காயமடைந்தவரை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
சாலை விபத்தில் காயமடைந்த குருநாதன் என்பவரை அவரது இல்லத்தில் சென்று ஜி.வி. மார்கண்டேயன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடன் பேரூர் கழக நிர்வாகிகள் தமிழரசன், வெங்கடேசன், மாரிராஜ், ராஜதுரை ஆகியோர் இருந்தனர்.
விளாத்திகுளம் தொகுதியில் மக்கள் நலனுக்கும், கிராம வளர்ச்சிக்கும் தொடர்ந்து செயல்படுகின்ற ஜி.வி. மார்கண்டேயனின் இந்த தொடர் நிகழ்ச்சிகள், பல்வேறு தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.