Breaking News

தூத்துக்குடியில் கனமழை காரணமான நீர்வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வுப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் இடையறாது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், திரேஸ்புரம் முகத்துவாரத்தில் கடலுக்கு மழைநீர் வெளியேறும் நிலைமையையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் பகுதி கழக செயலாளரும் மாநகர மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மலராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்திருந்தனர்.

மழை காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாதபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், நீரேற்ற பணிகள் முழு வேகத்தில் நடைபெறுவதாகவும் மேயர் தெரிவித்தார்.


  • Share on

தூத்துக்குடியில் ரத்த தான முகாம்: 35 பேர் நலனுக்காக ரத்தம் தானம் செய்தனர்!!

சிபிஐ கட்சி கவுன்சிலர் தனலெட்சுமி: மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஆறுமுகத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!

  • Share on

Trending News