Breaking News

ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா — மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரஹ்மத் நகர், முத்தம்மாள் காலனி, டாக்டர் செல்வராஜ் மருத்துவமனைச் சுற்று, ஆதிபராசக்தி நகர், வெங்கடேஸ்வரா அழகர் ஸ்டோர் பகுதி, KTC நகர், ஹௌசிங் போர்டு, ஓம் சாந்தி நகர், நேதாஜி நகர், ராம் நகர், அய்யனார் காலனி, கொத்தனார் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்ததை தொடர்ந்து,
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

பகுதிப்பகுதியாக மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்த அவர், இன்னும் தேவையான இடங்களில் உடனடியாக கூடுதல் மின் மோட்டார்கள் வைக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மழைநீர் இன்னும் தடையில்லாமல் வடிநீங்கும் வகையில் மோட்டார்களின் செயல்பாடு குறையாமல் கவனிக்கவும் பணித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி ஆணையாளர் முனீர் அஹமத், உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பகுதி கழக செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் வேல்முருகன், வட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், மகளீரணி பௌஷியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


  • Share on

“தனித்துவமான துரித வேட்டையில் தலைமறைவு எதிரிகளை பிடித்த காவலர்களுக்கு கண்காணிப்பாளர் வாழ்த்து & வெகுமதி!”

ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு: தூத்துக்குடியில் உயர்கல்விக்கான கல்விக்கடன் முகாம் – மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பு!!

  • Share on

Trending News