Breaking News

“மழைக்கால நெருக்கடியில் மக்களுடன் கவுன்சிலர் ரெங்கசாமி – நீர்தேக்கம் பிரச்சினை தீர்க்க அவசர நடவடிக்கைகள் தீவிரம்”

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 3-வது வார்டில் தொடர்ச்சியான கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நிலவிய நீர்தேக்கம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஹவுசிங் போர்டு காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை மற்றும் கழிவுநீர் கலந்து தேங்கி, பொதுமக்கள் வீடுகளில் இருந்தே வெளியே வர முடியாத அவல நிலை உருவானது.

இந்த கடும் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனக் கோரிய பொதுமக்கள், நேற்று (நவம்பர் 24) இரவு தூத்துக்குடி–எட்டயபுரம் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரைமணிநேரத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; தூத்துக்குடியிலிருந்து மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம், சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செலுத்தப்பட்டன.

தகவல் அறிந்ததும், மாநகராட்சி 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவின் சிறந்த துறைத்தலைவரான ரெங்கசாமி, நிலைமையை சமன் செய்ய உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களுடன் நேரடியாக பேசி பிரச்சினைகளை கேட்டறிந்தார். இதனுடன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சிப்காட் காவல் நிலைய போலீசார் மற்றும் மாநகராட்சி பொறியியல் அதிகாரிகளும் இணைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொதுமக்களின் அவசர கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஹவுசிங் போர்டு பகுதி முழுவதும் ராட்சத மின் மோட்டார்கள் கொண்டு நீர் வெளியேற்றும் பணிகளை உடனடியாக தொடங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, பிரச்சினையை முழுமையாக தீர்க்கும் நோக்கில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமியுடன் சேர்ந்து மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். மின் மோட்டார் மூலம் நீர் வெளியேற்றும் வேகத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தேவையுள்ள இடங்களில் கூடுதல் மோட்டார்களை உடனடியாக அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும், மேயர் ஜெகன் பெரியசாமியும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து, நீர் தேக்கம் அதிகமுள்ள இடங்களில் அவசர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் மோட்டார் அமைப்பு உட்பட தேவையான பணிகள் அனைத்தும் விரைந்து செய்யப்படும் என உறுதியளித்தார்.

இந்த ஆய்வுகளில் உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், கழக செயலாளர் சிவகுமார், ரெங்கசாமி, தெய்வேந்திரன், பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் தர்மர், பத்மநாபன், வேல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை நிலைமையை சமாளிக்க, பொதுமக்களுடன் நேரடியாக நின்று பேசிய உடனடி நடவடிக்கை எடுக்க உறுதி அளித்த மேயர், எம்எல்ஏ, அதிகாரிகளுடன் இணைந்து செயலில் காட்டும்

வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமியின் தீவிர தலையீடு
பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


  • Share on

தூத்துக்குடி பி&டி காலனியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் வேகப்படுத்தல் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

சூழலுக்கு எச்சரிக்கை – அய்யர்விளையில் வெள்ளநீர் நிலைபேறைப் பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன்!!

  • Share on

Trending News