தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ள முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அன்னை தெரசா காலனி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைநீர் வெளியேற்றம் விரைந்து நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பணிகளை மேயர் கண்காணித்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உட்பட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.